சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் சொக்கட்டான் பிள்ளையார் உள்ளார். அவரது உண்மையான பெயர் சொல் கேட்டான் பிள்ளையார். வழக்கு மொழியில் அவரை சொக்கட்டான் பிள்ளையாராக மாற்றிவிட்டனர்.
திருக்கடையூரில் உள்ளவர் கள்ளவாரண விநாயகர். பாற்கடலில் கடைந்த அமிர்த கலசத்தை தேவர்கள் விநாயகரை வணங்காமல் எடுத்து வந்துவிட்டமையால், அந்தக் கலசத்தை அவர் எடுத்து வந்து இங்கே ஒளித்து வைத்தாராம். எனவே, இவருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் என்ற பெயர்.
கும்பகோணத்தில் விசேஷமான படித்துறைகளில் ஒன்று பகவத் படித்துறை. இன்னொன்று பகவத் விநாயகர் திருக்கோயில். கும்பகோணம் புராணம், பகவன் என்பவனோடு இவரைத் தொடர்புபடுத்திப் பேசும். காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு சந்தனக் காப்பு, 8 மணிக்கு வீதியுலா ஆகியவை நடைபெறும்.
ஸ்ரீசிருங்கேரி சாரதா கோயிலின் மேற்கு பிராகாரத்தில் 10 கரங்களுடன் வித்தியாசமான ஸ்ரீசக்தி கணபதியைத் தரிசிக்கலாம்.
பாலக்காட்டின் வட எல்லையில் புது கல்பாத்தி கிராமம் உள்ளது. இங்க மகாகணபதி கோயில் உள்ளது. தினமும் இக்கோயில் கணபதி ஹோமம் நடந்து வருவதுதான் இதன் சிறப்பு.