பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
பாலக்காடு: கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழா, நேற்று துவங்கியது. கேரள மாநிலம், கல்பாத்தியில் உள்ள, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா, நேற்று நடந்தது. முன்னதாக திருக்கல்யாண உற்சவமும், இதை தொடர்ந்து, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, சுப்பிரமணியர், கணபதி ஆகியோரின் தேர்கள், நான்கு வீதிகளிலும் வலம் வந்தன. தேர் திருவிழாவில், இரண்டாம் நாளான இன்று, மந்தக்கரை, மகா கணபதி கோவில் தேரும், பழைய கல்பாத்தி, லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரும் திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை, சாத்தப்புரம், பிரசன்ன கணபதி கோவில் தேர் திருவிழா துவங்குகிறது. அன்றைய தினம் மாலை, 6:00 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமமும் நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.