பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
அவிநாசி: அவிநாசி ராயன் கோவில் காலனியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா, விநாயகர், வாஸ்து, சாந்தி, முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட திருக்குடங்கள், உலாவாக எடுத்து வரப்பட்டு, ராஜகணபதி, தத்தாத்ரேயர், லிங்கேஸ்வரர், துவாரகாமயி ஆகிய திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, பாராயணம் செய்யப்பட்டு, மகா ஆரத்தி ஆகியன நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகசுந்தரம் மற்றும் வாழும் கலை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடந்தன. விழாவில், அவிநாசி, திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.