விழுப்புரம்: விழுப்புரம் ஜனகவள்ளி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி கடந்த 12ம் தேதி மாலை 6:00 மணிக்கு சங்கல்பம், வாஸ்து சாந்தி, பவித்ர ஆராதனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு யாகசாலை ஹோமம், நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பிரதான ஹோமம், சிறப்பு திருமஞ்சனம், கோஷ்டி தீர்த்த பிரசாதம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை வாசுதேவ பட்டாச்சாரியார் செய்திருந்தார்.