பதிவு செய்த நாள்
15
நவ
2013
11:11
சேலம்: சேலம், செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், அறுபத்துமூவர் திருமேனிகளுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் அறுபத்து மூவர் திருமேனி நன்னீராட்டு விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. தொடர்ந்து மூன்று நாள், முதல் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, நான்காம் கால வேள்வி நடந்தது. பன்னிரு திருமுறை மன்றத்தின் சார்பில், கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் ஐம்பொன்களால் உருவாக்கப்பட்ட, அறுபத்து மூவர் திருமேனிகள் நேற்று பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நேற்று காலை, 8 மணிக்கு மேல், 10 மணிக்குள் அறுபத்து மூவர் திருமேனிகளுக்கு நன்னீராட்டு பெரு விழா நடந்தது. செயல் அலுவலர் ஞானமணி, மன்றத் தலைவர் அருணாசலம், செயலாளர் அர்த்தநாரி, பொருளாளர் சிவாஜி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.