கரிகிருஷ்ண பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர்: பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
திருவள்ளூர்: பொன்னேரி அருகே திருவாயர்பாடியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோயில். இக்கோயிலுக்கானத் திருக்குளம் பராமரிப்பின்றி, குளம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது. குளம் பாழாகிபோனதால் குளத்தை வலம் வருவதோடு உற்சவம் நடத்தப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை அடுத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைத்தது. குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை.... பல லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த கோயில் குளம் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் குவிந்து மாசுபடுவதை தவிர்க்கவும், சிறுவர்கள் மற்றும் முதியோர் குளத்தில் தவறி விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.