பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
ஆர்.கே.பேட்டை: மலை கார்த்திகையை தொடர்ந்து, நேற்று, ஊர் கார்த்திகை கொண்டாடப்பட்டது. பெண்கள், வீடு முழுவதும், அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். கார்த்திகை தீபம், மலைக்கார்த்திகை என்றும், அதற்கு அடுத்த நாள், ஊர் கார்த்திகை என்றும், ஆர்.கே.பேட்டை பகுதியில் கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, வங்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், பெண்கள் வீடு முழுவதும், அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த நாளில் மட்டுமே தண்ணீரை சிறப்பாக கொண்டாடும் வழக்கம் இப்பகுதியில் உள்ளது. இதையடுத்து, வீட்டு கிணறு, தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியே தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. வழக்கம் போல, மாலை, 6:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டதும், தீப ஓளியில் ஊரே ஜொலித்தது.