சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ரு.10 லட்சத்தில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் கிராமத்தில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் ரு.10 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேச பாகவதர், நடராஜ அய்யர் மற்றும் காட்டுவனஞ்சூர் ராம பக்த மண்டலியினர் செய்து வருகின்றனர்.