பத்மநாப சுவாமி கோயில் குளத்தில் விஷ்னு சிலை: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2013 01:11
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோயில் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு கோயிலாகும். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இத்தல பெருமாள்12 ஆயிரம் சாளக்கிராம கற்களால் ஆனதாகும். பெருமாளின் திருமேனி 18 அடி நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் குளத்தில். அனந்த சயன கோலத்தில் விஷ்னுவின் சிலை மிதக்க விடப்பட்டுள்ளது. இது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.