பதிவு செய்த நாள்
21
நவ
2013
10:11
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், வெயில் மற்றும் மழையில், அவதிப்படாமல் இருக்க, 80 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில், கூரை அமைக்கப்பட உள்ளது. காற்றும், வெளிச்சமும் சுலபமாக நுழையும் கார்பனைடு தகடுகளால், வகுளமாதா சன்னதியில் இருந்து, கோவிலை சுற்றி, கூரை அமைக்கப்பட உள்ளது. இதற்கு முன், கல்யாண உற்சவ மண்டபத்திற்கு செல்லும் வழியில், அமைக்கப்பட்ட பாலி கார்பனைடு கூரையால், பக்தர்களுக்கு பாதுகாப்பு கிடைத்ததை அடுத்து, தேவஸ்தானம், கோவில் வளாகத்திலும் கூரையை அமைக்க, முடிவு செய்துள்ளது.