Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோயில் வைகாசியில் ... திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் கூரை! திருப்பதி ஏழுமலையான் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் படிபூஜை: 2028 வரை முன்பதிவு நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 நவ
2013
10:11

உதயஸ்தாமன பூஜை 2021 வரை புக்கிங்: சபரிமலையில் படிபூஜை நடத்த விரும்பும் பக்தர்கள் இனி 15 ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே பூஜை நடத்தமுடியும். இந்த பூஜைக்கு 2028 வரை முன்பதிவு முடிந்து விட்டது. சபரிமலையில் அதிக செலவு கூடியதும், அதிக பக்திபூர்வமானதுமான பூஜை படிபூஜை. சபரிமலையில் அமைந்துள்ள 18 படிகளும் ஒவ்வொரு மலைகளை குறிக்ககூடியதாகும். பொன்னம்பலமேடு, குண்டலிமாமலை, சுந்தரமாமலை, நாகர்மலை, இஞ்சிக்கோட்டை, கரிமலை, மயிலாடும்மாலை, சிற்றம்பலமலை, ஸ்ரீபாதமலை, புதுசேரிமலை, மதங்கமாமலை, கல்கிமகேஸ்வரமலை, நிலக்கல் சிவமலை, தலைப்பாறைமலை, தேவர்மலை, காளைகட்டிமலை, நீலிமலை, சபரிமலை என 18 மலைகளை இந்த படிகள் குறிக்கிறது. இந்த மலை தேவதைகளுக்காக நடத்தப்படும் பூஜைதான் படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து தேங்காய், பூ மற்றும் நிவேத்ய பொருட்கள் வைத்து தந்திரிகள் நடத்தும் பூஜைதான் படிபூஜை. சுமார் ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். பூஜை நடைபெறும் போது இரண்டு மணி நேரம் வரை பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் இந்த பூஜை நடைபெறுவதில்லை. மாதபூஜைகளின் போது இந்த பூஜை நடைபெறுகிறது. 2028 ஆகஸ்டு வரை இதற்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் 15 ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே படிபூஜை நடத்த முடியும். படிபூஜைக்கான தற்போதைய கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். உதயாஸ்தமனபூஜை என்பது அதிகாலை நடை திறந்து நிர்மால்யதரிசனம் முதல் இரவு அத்தாழபூஜை வரை நடக்கும் 18 வகையான பூஜைகள்தான் உதயாஸ்தமனபூஜை. இதில் மதியம் கலசாபிஷேகமும் நடைபெறும். இதற்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். இதற்கான முன்பதிவு 2021-ம் ஆண்டு வரை நிறைவு பெற்று விட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar