திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், பக்தர்கள் வசதிக்காக, கார்த்திகை முதல் கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது.வழக்கமாக இக்கோயிலில்,காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும். தற்போது, கார்த்திகை முதல் அய்யப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு,கூடுதலாக, மதிய இடைவேளையில் நடை அடைக்கப்படாமல் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறக்கப்பட்டுள்ளது.மார்கழி முதல் அதிகாலை 4 மணிக்கே நடைதிறக்கப்படும்.