ஆண்டிபட்டி: பாலவிநாயகர் திருக்கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. மூலவர் சுவாமி ஐயப்பன் ஐம்பொன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் நாள் செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பூர்வங்க பூஜை மற்றும் பூர்ணஹூதி நடைபெற்றது. புதன்கிழமை காலை 8 மணிக்கு மேல் வேதசிவகாம பாராயணங்கள் ஒதப்பட்டன.பின்னர், கடங்கள் புறப்பாடாகி, கோயில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.