ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சொர்க்க பனை தீபம் ஏற்றப்பட்டது.கள்ளபிரான் சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மாலை சுவாமி ஆயர்களுடன் தங்க தோளுக்கினியானில் அலங்கரிக்கப்பட்டு புறப்பாடு நடந்தது. மேடை பிள்ளையார் கோவில் அருகே உள்ள திடலில் நட்டப்பட்ட இருந்த சொக்கப் பனை தீபம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த பனை உயர மகா தீபத்தை கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க வழிபட்டனர். பின்னர் தீபாராதனை நடந்தது. விழாவில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், நிர்வாக அதிகாரி தனலட்சுமி, டவுண் பஞ்., தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.