சின்னசேலம்: சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பியில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கார்த்திகை மாதம் சனிக்கிழமையை முன்னிட்டும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. திராளன பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். குருக்கள் ஸ்ரீதர் சாமி அலங்காரம் செய்து வைத்தார். வரும் திங்கள்கிழமை(25ம் தேதி) வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.