திண்டிவனம்: திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் பா.ஜ., கட்சியின் பாத யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. வீடு தோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை என்ற பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சந்திரன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் வினோத்குமார், நிர்வாகிகள் வேணுகோபால், கிரி தரபிரசாத், திருவேங்கடன், சிவராமன், ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அனைத்து கிளைகளிலும் பாத யாத்திரை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், அனைத்து வாக்கு சாவடிகளிலும் பூத் ஏஜென்ட் நியமிக்க வேண்டும், உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.