ராமநாதபுரம்: புனித சவேரியார் சர்ச் விழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மறை மாவட்ட அதிபர் ராஜமாணிக்கம், உதவி பாதிரியார் சேவியர் ஆரோக்கியசாமி சவேரியார் அர்ச்சிப்பு செய்து கொடியேற்றினார். இதையடுத்து திருப்பலி நடந்தது. டிச. 2 வரை தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறை சிந்தனைகள் பாதிரியார்கள் தலைமையில் நடக்கின்றன. டிச. 2 மாலை 6 மணிக்கு விழா திருப்பலி, தேர்ப்பவனி நடக்கிறது. டிச.3ல், காலை 6.15 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் இமானுவேல், பங்கு பேரவை, அன்பியங்கள், வின்சென்ட் சபை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.