தியாகராஜர் கோவிலில் திருப்பனந்தாள் ஆதினம் சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 10:11
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று முன் தினம் இரவு கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு திருப்பனந்தாள் ஆதினம் மற்றும் உதவி ஆதினம் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர். திரு வாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டு தோறும் இரண்டாவது சோம வாரத்தை திருப்பனந்தாள் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் எஜமான் சுவாமிகள், உதவி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், அவர்களது உபயமாக நடத்திபக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான உபயநிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதினங்கள் இருவரும் கோவிலில் கமலாம் பாள் உள்ளிட்ட சன்னிநிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். அதனை தொடர்ந்து தெற்கு வீதியில் உள்ள மடத்தில் பக்தர்களுக்கு அன்ன தாம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டபலர் பலர் பங்கேற்றனர். இதே போன்று விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர கோவி லில் திருமணத் தடை மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் பங் கேற்று அம்பாளை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.