கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2013 10:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைக்கத்தஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை ருத்ரஜெபம், அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. நோய்கள் தீரவும், குழந்தை பேறு வேண்டியும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை மகாதேவ அஷ்டமி அன்னதான டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.