விரதமிருக்கும் போது பட்டினியாக இருப்பது மரபு. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளும். பலருக்கு முடியாது. குறிப்பாக, நோயாளிகளுக்கு தினமும் சாப்பிட்ட பிறகே மாத்திரை போட வேண்டியிருக்கும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மிக எளிமையாக மேற்கொள்ளலாம். அவ்வையாரின் பாடல் ஒன்றைக் கேளுங்கள்.
இந்தப் பாடலில் வரும்மேனி நுடங்காது என்ற வார்த்தைக்கு உடம்பை வருத்தாமல் இருத்தல் எனப்பொருள். உடம்பை வருத்தாமல், பூக்களை மட்டும் கொண்டு, சிவந்த மேனியை உடைய, விநாயகரின் பாதத்தில் பூஜித்தால் சிறந்த வாக்குவன்மை, நல்ல மனம், லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும் என்கிறார். இவை தானே ஒரு மனிதனுக்கு தேவை! இந்த எளிய வழிபாட்டை நோயாளிகள் தினமும் கடைபிடித்து இறைவனின் திருவருளை அடையலாம்.