பதிவு செய்த நாள்
04
டிச
2013
10:12
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே சவேரியார்புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது.பேயக்குளம் அருகேயுள்ள சவேரியார்புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் பதிய ஆலயத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்பு ரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். முன்னதாக சவேரியார்புரம் ஊர் நுழைவு வாயிலில் ஆயருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் சவேரியார் புரம் பங்குதந்தை சகாய ஜஸ்டின் அருட்சகோதரிகள், இறைமக்கள் கலந்துகொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் மாலையில் புதிய ஆலயத்தை ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நிகழ்ச்சி நடத்தினார். இதில் இறைமக்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.தூய பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலய அர்ச்சிப்பு மற்றும் 9ம் திருவிழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தந்தை அமல்ராஜ், மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் தந்தை டோம்னிக் அருள்வளன், சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு எட்வர்ட்,சிந்தாமணி, பங்குதந்தை ஜெரால்டு, சோமநாதபேரி பங்குதந்தை இருதயசாமி, தாளமுத்துநகர் பங்குதந்தை ஜாண்சன், குரும்பூர் பங்குதந்தை ஆரோக்கியதாஸ், பார்ப்பரம்மாள்புரம் பங்குதந்தை விக்டர் சாலமோன், புதிய அருட்தந்தை அற்புதசேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதரின் அலங்கார தேர்ப்பவனி நடந்தது. விழாவில் இன்று மாலை 6 மணிக்கு பொது அசன சிறப்பு விருந்து நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சவேரியார்புரம் பங்குதந்தை சகாய ஜஸ்டின், அருட்சகோதரிகள் மற்றும் சவேரியார்புரம் இறைமக்கள் செய்திருந்தனர்.