சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் உலக நலனிற்காக சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது.தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கார்த்திகேயன் முன்னிலையில் யாக வேள்வி பூஜைகள் நடந்தது.முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.