சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் சுவாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு, கோவில் கும்பாபிஷேக விழா இன்று(9 ம் தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை சுவாமி சிலைகள் கரிக்கோல நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சிலைகள் காட்டுவனஞ்சூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. பின்னர் கோவிலில் சுவாமிசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமங்கள் நடந்தது. திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.