பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட தமிழ் இலக்கிய மேடை, அனுகிரகா பவுண்டேஷன் ஆகியன இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை இரண்டாம் பிரிவாகவும், 9, 10ம் வகுப்பு மூன்றாம் பிரிவாகவும் நடத்தப்படுகிறது. முதல் பிரிவில் கலந்து கொள்பவர்கள் 10 பாடல்களையும், இரண்டாம் பிரிவில் பங்கேற்பவர்கள் 20 பாடல்களையும், மூன்றாம் பிரிவில் உள்ளவர்கள் 30 பாடல்களையும் ஒப்புவிக்க வேண்டும். முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு, சிறப்பு சான்றிதழ் உண்டு. போட்டிகள் நரசிம்மநாயக்கன்பாளையம் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு 97871 11184 மற்றும் 95665 93632 ஆகிய மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.