பாகூர்: பாகூரில் தண்டபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.அதையொட்டி, கடந்த 6ம் தேதி பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை öŒ#து, 9.35 மணிக்கு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு விநாயகர், இடும்பன் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தியாகராஜன், ராஜவேலு உள்ளிட்ட ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.