திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள, சொக்கம்மன் கோவில் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் அக்டோபர் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, தினசரி மண்டல பூஜை நடைபெற்றது. கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு யாக பூஜைகள் தொடங்கி, 10:00 மணிக்கு காப்பு களைதல், மகா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புஷ்ப அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வீருபொம்மு, அர்ச்சகர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.