ராமேஸ்வரம் கோயில் தீர்த்த பாதையில் கற்கள் பதிக்கும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2013 12:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்த பாதைகளில் சிமிண்டு கற்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மற்ற அனைத்து பகுதிகளிலும் கற்கள் பதிக்கப்பட்டன. 5, 6 ஆகிய தீர்த்தங்களுக்கு செல்லும் வழியில் மட்டும் பதிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த பகுதிகளிலும் கற்கள் பதிக்கும் பணி ரூ.4 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிவடைய வில்லை எனவே அந்த தீர்த்தங்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.