உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வரும் 18ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு, அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. வரும் 17ம் தேதி காலை 10.00 மணிக்கு, நடராஜ பெருமான் சிவகாமி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி காலை 5.00 மணிக்கு மேல், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி மாலை 6.00 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 7.00 மணிக்கு, அபிஷேக ஆராதனையுடன், ஆருத்ரா தரிசன விழா, நிறைவடைகிறது.