பதிவு செய்த நாள்
12
டிச
2013
10:12
புதுச்சேரி: இடையார்பாளையம் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அரியாங்குப்பம் அடுத்த இடையார்பாளையம் கிராமத்தில் உள்ள எல்லையம்மன், லட்சுமி நாராயணப் பெருமாள், ஆஞ்சநேயர், கெங்கையம்மன், பூரண புஷ்கலை சமேத ஐயனார், வீரன் ஆகிய கோவில் திருப்பணி மற்றும் புதிய மகா மண்டபம், ராஜகோபுரம் பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தது.இன்று (12ம் தேதி) காலை இரண்டாம் கால யாக பூஜை, புதிய சிலைகள் கரிக்கோலம், தீபாராதனை, மாலையில் மூன்றாம் யாக பூஜை, யந்திரஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (13ம் தேதி) காலை நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 7.00 மணிக்கு ஐயனார், வீரன் கோவில், 7.30 மணிக்கு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. 8.15 மணிக்கு எல்லையம்மன் கோவில் ராஜகோபுரம், மூலவர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.