பம்பையில் நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஐகோர்ட் உத்தரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 12:12
சபரிமலை: பம்பையில் நவீன உயிர்காக்கும் கருவிகளுடன் கூறிய ஆம்புலன்ஸ் எப்போதும் தயார் நிலையில் நிறத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும் போது அவர்களுக்கு நீலிமலை, அப்பாசிமேடு, சன்னிதானம்ஆகிய இடங்களில் உள்ள கார்டியாலஜி சென்டர்களில் முதலுதவி செய்த பின்னர் ஸ்டிரெச்சரில் பம்பை கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை ஆஸ்பத்திரி அல்லது கோட்டயம் மருத்துவக்கல்லூக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதற்காக கேரள சுகாதரத்துறை சார்பில் பம்பையில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆம்புலன்சுகளில் போதிய உயிர்காப்பு கருவிகள் இல்லை என்று புகார்கள் வந்தது. இதை ஆய்வு செய்த ஸ்பெஷல் கமிஷனர் பாபு, கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ராமச்சந்திரன்நாயர், கமால்பாஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் , நவீன உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்சை பம்பையில் நிறுத்த சுகாதரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.