காஞ்சிபுரம்: கௌசிக துவாதிசியை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காஞ்சிபுரம் வரததராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை மாதத்தில் வரும் கௌசிக துவாதிசி நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது.மேலும், இதனை முன்னிட்டு மூலவர் வரதராஜ பெருமாளுக்கு நேற்று முத்துக்கள் பதிக்கப்பட்ட வெல்வெட் துணிகளினால், முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஆண்டுக்கு ஒருமுறை முத்தங்கி அலங்காரத்தில், காட்சி அளிக்கும் பெருமாளை காண்பதற்காக, கோவிலில் நேற்று காலை முதல் மாலை வரை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.