பதிவு செய்த நாள்
16
டிச
2013
11:12
ராஜபாளையம்: ராஜபாளையம், வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில், ஐயப்ப சுவாமி வீதி உலா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, டிச., 13ல் முடங்கியார்ரோடு சித்திவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. அன்று இரவு, கோயில் எதிரே அன்னதான பந்தலில் ஐயப்ப சுவாமி எழுந்தருளல் நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், கன்னி பூஜை மற்றும் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தன. நேற்று காலை, கஜபூஜையுடன் ஐயப்ப மற்றும் கருப்பணசுவாமி வீதி உலா துவங்கியது. முப்பிடாதி அம்மன் கோயிலில் துவங்கி, முக்கிய வீதி வழியாக சென்று, அன்னதான பந்தலில் முடிந்தது. மதியம், அன்னதானம் நடந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.