திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.மேலத்தாழனூர் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன், பால விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ரமணன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜையை செய்தனர்.