பந்தலூர்: பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 5:30 மணி முதல் சிறப்பு பூஜை, 10:00 மணிக்கு அபி ஷேக ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பகல் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் செய்தனர். மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் நடப்பு மாதத்திற்கான கிருத்திகை பூஜை நேற்று அன்னமலை முருகன் கோவிலில் நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகத்தை ராஜூ சுவாமி நடத்தி வைத்தார். பக்தர்களின் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணானந்தாஜி செய்திருந்தார்.