திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 05:01
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது.
இதையொட்டி முருக பெருமானுக்கு பால், பழம், சந்தனம் ,ஜவ்வாது,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.