சபரிமலை: சபரிமலையில் கார்த்திகை தீப விழாவையொட்டி சன்னிதானத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்தில், கார்த்திகை தீப விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டு விட்டது. கேரளாவில் நேற்று கார்த்திகை தீப விழாவாகும். இதையொட்டி, சபரிமலையில் நேற்று மாலை தீபாராதனையின் போது கோயில் சுற்றுப்புறங்கள்,கொடிமரம் அருகே உள்ள அடுக்கு விளக்குகளில் தீபம் ஏற்பட்டது. இது போல மாளிகைப்புறம் கோயிலிலும், சன்னிதானத்தில் செயல்படும் அலுவலகங்கள், கடைகள் என எல்லா இடத்திலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டது.