சபரிமலையில் 28 லட்சம் பக்தர்கள் தரிசனம்: 72 கோடி ரூபாய் வருமானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2013 11:12
சபரிமலை: சபரிமலையில் கடந்த 13-ம் தேதி வரை 28 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் தேவசம்போர்டுக்கு முக்கிய வருமானங்களின் மூலமாக 72 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் கடந்த நவ., 16 ல் மண்டல காலம் துவங்கியது. அன்றிலிருந்து சில நாட்களை தவிர்த்தால், எல்லா நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. டிச., 13 இரவு 12 மணி வரை 28 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். அப்பம் விற்பனையில் அடிக்கடி கட்டுபாடுகள் இருந்தது. எனினும், 28 நாட்களில் 7 கோடி ரூபாய்க்கு அப்பம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2 கோடி ரூபாய் அதிகம். அரவணை விற்பனையில் 33 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 29.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. காணிக்கையாக 30 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 24 கோடியாக இருந்தது.
கட்டுப்பாடு நீக்கம்: அப்பம் உற்பத்தி அதிகரித்து, ஸ்டாக் கூடியுள்ளதால், விற்பனையில் இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக, சபரிமலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.