விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சபரிகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி 14ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு சபரிகிரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு குருசாமிகள் பாலு, செல்வம் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் பஜனையில் ஈடுபட் டனர். இரவு 7:00 மணிக்கு சபரிகிரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அப்பகுதியை சேர்ந்த சிவா குழுவினர் செய்திருந்தனர்.