திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் திருவூடல் வைபவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் திருவூடல் வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ராதரிசன விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் பிரகன்நாயகி, வீரட்டானேஸ்வரர்க்கு தனுர்மாத பூஜை, விசேஷ அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர்க்கு விசேஷ ஆராதனை செய்யப்பட்டு திருசிற்றம்பல கோஷத்துடன், பஞ்சாட்சத மந்திரம் முழங்க ஆலய வலம்வந்து வீதியுலா துவங்கியது. சுவாமி கோவிலை அடைந்தவுடன் வசந்த மண்டபத்தில் சுந்தரர் வருகைதந்து திருவூடல் உற்சவம் முடிந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.