பதிவு செய்த நாள்
18
டிச
2013
06:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச. 9ல் மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டும் நிழச்சியுடன் தொடங்கியது. நேற்று இரவு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் சத்தியகிரிஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் எழுந்தருளி ராட்டின திருவிழா நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்ட அதிகாலை மூலவர் நடராஜர் வியாத்ர பாதர் முனிவர், காரைக்கால் அம்மையார், சிவகாசி அம்பாள், பதஞ்சலி முனிவருக்கு தைல காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, உற்சவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து நடராஜர், மாணிக்கவாசகர் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்பாள் வெள்ளி அம்பாரியிலும் பூ சப்பரங்களில் கிரிவலம் சென்று அருள்பாலித்தனர். திருநகர்
சித்தி விநாயகர் கோயில்: ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, காலை ருத்ரபாராயணம், பூஜைகள் முடிந்து நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் பஞ்லோக விக்ரகங்களுக்கு அபிஷேக, ஆராதøனைகள் முடிந்து பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது.