பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, நடராஜருக்கு தீப மை சாத்தி வழிபாடு நடந்தது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த மாதம், 17ம் தேதி திருவண்ணாமலை மீது மஹா தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஏற்றிய போது, தீபத்தில் கிடைத்த மை பிரசாதத்தை, ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜருக்கு சாத்தும் விழா நடந்தது. இதை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர்கள். அப்போது, நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு தீப மை சாத்தப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் வழிநெடுகிலும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.