மூடப்படாத நிலையில் உள்ள வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2013 10:12
கடையம்: வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் திருத்தேரை பாதுகாப்பார்களா? கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் தேரை பாதுகாத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தசரத சக்கரவர்த்தி தனது பாவ விமோசனத்திற்காக வந்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் கடையத்தில் பாரதியார் வாழ்ந்த காலங்களில் இக்கோயிலில் தினமும் வழிபட்டு கோயிலின் முன்புள்ள பாறையில் அமர்ந்து "காணிநிலம் வேண்டும் பராசக்தி என்பன உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். புகழ்பெற்ற இக்கோயிலின் தேரோட்டம் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் நடப்பதுவழக்கம். கோயில் மேற்கே இருந்தாலும் தேர்த்திருவிழா ஊரில் மையப்பகுதியில் நடக்கும். இதற்காக தேர் கடையம் பஸ் ஸ்டாண்டில் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பு தேரின் சக்கரங்கள் பழுதுபட்டதால் மிகவும் சிரமப்பட்டு பக்தர்கள் மற்றும் அறநிலையத்துறை இணைந்து இரும்பினால் ஆன சக்கரங்களை பொருத்தியுள்ளனர். தேர் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் தேரின் சுற்றுப்புறங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டு நீர் கரையான் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்தப்பட்டிருப்பதால் ஏராளமான தூசு தேரின் மீது படிகிறது. ஏற்கனவே மேற்பகுதியும், அடிப்பகுதியும் மூடப்பட்டிருக்கும் நிலையில் நடுப்பகுதி மட்டும் மூடப்படாமல் இருக்கிறது. தேரில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சீர் செய்வது மிகவும் கடினம். எனவே பழுது ஏற்படுவதற்கு முன்னர் தேரை முழுமையாக மூட வேண்டும். இந்து அறநிலையத்தறை நடவடிக்கை எடுக்குமா? -ஓ.எஸ்.உலகநாதன்.