செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதி கிராம தேவதைகளாக செஞ்சி கோட்டை செல்லியம்மன், பூவாத்தம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மூன்று கோவில்களிலும் பொங்கல் வைத்து, கரகம் எடுத்து, கூழ் ஊற்றி மூன்று நாள் திருவிழா நடத்துகின்றனர்.மாரியம்மன் கோவில் நகருக்கு மத்தியில் உள்ளது. எழுநூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதற்கான திருப்பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.கட்டுமான பணிகள் முடிந்து வர்ணம் தீட்டும் பணியை துவங்க உள்ளனர். விரைவில் கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.