திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.காலை 8 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. 9 மணிக்கு கலசம் வீதியுலா நடந்தது. கோவிலை அடைந்தவுடன் கலச பூஜைகள், கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சாஸ்தா ஹோமம், விசேஷ திரவ்யாகுதி,பூர்ணாஹூதி, வசோத்தாரை, அய்யப்பனுக்கு 108 கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் அய்யப்பனுக்கு சோட வோபசார தீபாராதனை நடந்தது. மாலை 3.30 மணிக்கு வீரட்டானேஸ்வரர் கோவிலில் இருந்து திருவாபரணம் புறப்பாடாகியது. இரவு 7 மணிக்கு ராஜ அலங்காரத்துடன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.