ஓமலூர்: பெரிய மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் மீது மார்கழி மாத முதல் வாரத்தில் மட்டும் சூரிய ஒளி விழும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தருமபுரி சாலையில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி முதல் வாரத்தில் காலை நேரத்தில் சூரிய ஒளி அம்மன் சிலையில் விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் சூரிய ஒளி பிரகாசமாக அம்மன் சிலையின் மீதும், மூலவர் அம்மன் சிலை மீதும், அதன் பிறகு உற்சவர் பெரிய மாரியம்மன் மீதும் சூரிய ஒளி கோபுரக் கலசம் வழியாக விழும் நிகழ்வை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.