திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் கடை வைக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் 1996-ல் ஏற்பட்ட தீ விபத்தில் இயங்கி வந்த 56 வளையல் மற்றும் பாத்திரக் கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து,16 கால் மண்டபத்தை சீரமைத்துவிட்டு பிறகு பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு கடை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்ததாம். ஆனால், இதுவரை வியாபாரிகளுக்கு அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 16 கால் மண்டப வியாபாரிகள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அ.ஞானசேகரனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். இம் மனுவில், இப்போது நாங்கள் தென்ஒத்தவாடைத் தெருவில் கடை வைத்துள்ளோம். அங்கு வியாபாரமே நடைபெறுவதில்லை. இதனால், எங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் 16 கால் மண்டபம் பகுதியில் கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்று கோரியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.