Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸத்குரு சாந்தானந்த கலா கேந்த்ராவின் ... அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை! அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரன்முளாவிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2013
10:12

சபரிமலை: சபரிமலையில், மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலபூஜை, 26-ம் தேதி நடைபெறுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக, 41 நாட்கள் நடைபெறும் பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன், பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரசனம் வழங்கி இந்த பவனி பம்பை வந்தடையும்.

நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், கோயில் முன், இந்த அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசசையில் நின்று தரிசனம் நடத்தினர். பின், 6.30 -க்கு அங்கி சபரிமலை மாதிரி ரதத்தில் வைக்கப்பட்டது. காலை, 7:00மணிக்கு பவனி புறப்பட்டது. நேற்று இரவு, ஓமல்லூர் பகவதி கோயிலில் இந்த பவனி தங்கியது, இன்று காலை இங்கிருந்து புறப்படும் பவனி இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்குகிறது; நாளை காலை இங்கிருந்து புறப்படும் பவனி இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. 25-ம் தேதி, மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை, 3:00 மணிக்கு, தலைச்சுமையாக, சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை, 6:30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 26-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டலபூஜைக்கு, இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.. சரங்குத்தியில் அங்கிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் இன்று வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar