ஈரோடு: ஈரோடு தாலுகா, 60 வேலம்பாளையம் துக்காச்சி குப்பியண்ண சுவாமி, செவ்வகுமாரசுவாமி கோவில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 20ம் தேதி கணபதி ஹோமம், பல்வேறு கோவில்கள் சார்பில் அபிஷேகம், அத்தனூர் அம்மன், குப்பியண்ண ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், பூச்சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு அபிஷேகம் நடந்தது. வரும், 27ம் தேதி வரை, தினமும் மாலை ஏழு மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. 28ம் தேதி விழா துவங்கி, 29ம் தேதி பொங்கல் வைத்தலும், 30ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.