திண்டுக்கல் சிறுமலையில் அகத்தியர் ஜெயந்தி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2013 11:12
திண்டுக்கல்: சிறுமலை வெள்ளிமலை அடிவாரம் அகத்தியர்புரத்தில் அமைந்துள்ள அகத்தியர் மகரிஷி ஒளி தேக ஷேத்திரத்தில், போகர் மகரிஷி தனது சீடர் புலிப்பாணி சித்தருக்கு கூறியபடி அகத்தியரின் அவதார திருநாளான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரமான நேற்று அகத்தியர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் உலக மக்கள் அனைவரும் அன்புடன் ஆனந்தமாக வாழ வேண்டி, 108 புண்ணிய தீர்த்தங்கள், 108 மூலிகைகளுடன் அகத்திய பீடத்தின் முன்பு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்த்து குரு ஓரையில் கும்ப முனியான அகத்தியருக்கு 1008 அஷ்ட அதிக ஸஹஸ்ர கும்ப கலசாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏழு பெண் குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து சப்த கன்னியர் பூஜை செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்த பின் அகத்தியருக்கு அலங்காரம் செய்து, சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் காலை மதியம் என இரண்டு வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதானக்குழுவும், ஸ்ரீ அகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்ட் - ஒளி தேக ஷேத்திரமும் இணைந்து செய்திருந்தது.