சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஜனவரி, 15, 16, 17 ஆகிய தேதிகளில், தெப்ப திருவிழா நடக்கிறது. நீர்நிலைகளின் மகத்துவத்தை போற்றுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தெப்பத் திருவிழா நடத்தப்படுவது, வழக்கம். இந்த ஆண்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 15,16,17 தேதிகளில், தெப்பத் திருவிழா நடக்க உள்ளது.